காற்று வெளியிடைக் கண்ணம்மா;
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்;
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப் பொன் னொத்தநின் மேனியும்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! - இந்தக் (காற்று)
நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே- என்றன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்மா
வென்ற பேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே-என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே-இந்தக் (காற்று)
- மகாகவி பாரதியார்
அஜய் ரிஹான்'னின் கவிதை பொருள் விளக்கம் :
அவன் : பாரதியார்
அவள் : கண்ணம்மா
"காற்று வெளியிடைக் கண்ணம்மா;
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்;
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்"
அவனுக்கும் அவளுக்குமான காதல் இடைவெளி வெறும் மூச்சு விடும் தூரம் மட்டுமே, அவர்கள் இருவரும் ஒருவரின் மேல் ஒருவர் வைத்துள்ள அளவில்லா காதலை எண்ணி எண்ணி அந்த காதலிலேயே மீண்டும் மூழ்கிப் போகிறான். அவளை வர்ணிக்க எண்ணி அவள் இதழ்கள் அமுது என்று நிறுத்திக் கொள்ளாது ஊறிக் கொண்டே இருக்கும் ஊற்று என்றும், நிலவு இவள் கண்களில் ஊறி அழகு ததும்புகிறதோ என வியக்கிறான்.
"பத்து
மாற்றுப் பொன் னொத்தநின் மேனியும்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே!"
மேனியின் அழகினை மாசில்லா தங்கம் போலே மின்னும் அழகும், இந்த உலகில் நான் உள்ள வரை இந்த அழகில் மயங்கி, வேறொரு நினைவேதும் என்னை தாக்காது , நான் இவ்வுலகத்தை சார்ந்தவன் தானோ இல்லை இல்லை விண்ணில் இருந்து வந்தவனோ என யோசிக்கச் செய்யுமோ இந்த அழகு.
"நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே- என்றன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்மா
வென்ற பேர்சொல்லும் போழ்திலே"
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே- என்றன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்மா
வென்ற பேர்சொல்லும் போழ்திலே"
நீ எனது உயிராவாய் ,எந்நேரமும் உன் நினைவிலேயே மூழ்கிக் கிடப்பேன், உன்னை பார்த்த கணமே எனது துன்பங்கள் மறைந்து போனது. கண்ணம்மா என்னும் பெயரை சொல்லும் போதே எந்தன் வாயில் அமுதூறுவது போன்ற சுவையை உணர்கிறேன். உன்னுடைய பெயரே இவ்வளவு சுவையுடையதோ !
" உயிர்த் தீயினி லேவளர் சோதியே-என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே "
இந்த வரிகளில் காதலின் உச்சம் சொல்லும், அடங்கா இன்பம் பெருக்கெடுத்து ஓட, என்னுடைய உயிர் கொண்ட காதலின் பெருந்தீயை அணைக்கும் சக்தியை நான் காண்பேன், சித்தம் ஒன்றென உன்னுடன் கூடல் கொள்கையில்.
- அழகான வரிகள், ரசித்தேன், நீங்களும் ரசிப்பதற்காக !
"Mundasu kavingyan" Bharathiyin. Kavidhaiyai vinja poovulagil aal yedhu nanba?
பதிலளிநீக்குஆமாம், அவன் கவிக்கென்றே பிறந்தவன், கவி ஆளப் பிறந்தவன், கவியால் ஆட்கொள்ளப்ப ட்டவன்.
நீக்குPathu matru pon ottha nin meaning vari in vilakam sollunga nanbare
பதிலளிநீக்குஇவ்வரிகளில், பத்து என்பது பட்டு எனக்கொள்ளப்படும். பட்டிற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொன்னை போல மின்னும் உன் தேகம் என அர்த்தம் கொள்ளலாம்.
நீக்குமேற்குறியவை பேச்சுவழக்கு பொருள், தமிழ் இலக்கண / இலக்கிய முறையில் "பத்து" என்று மட்டுமே கொள்ள வேண்டும். தங்கம் பல பெயர்களில் வழங்கப் படுகிறது. அவற்றுள் 1. (பத்தறை மாற்றுப்) பசும்பொன்,2. ஆனிப்பொன், 3.மேலும் சில. ஆதலால், மாசிலா தங்கம் / பொன் என்றே இங்கு பொருள் கொள்ள வேண்டும்.
நீக்குAnna tamil ilakkanam ilakiyam therunjukanum epudinu solunga ena book padikanum please konjam solunga anna
பதிலளிநீக்குவாசித்தல்... வாசிப்பு மட்டுமே தமிழ் ஆர்வத்திற்கு தீனி. . இலக்கணம் தெரிந்து கொள்ள எழுதி பழகவும். ர, ற வேற்றுமை, ல, ள, ழ வேறுபாடு தெரிந்து கொள்க. இலக்கியம் என்பது சமுத்திரம். பெருங்காப்பியங்கள் படிக்க முயல்க. வாசித்தலும், எழுதி பழகுவதுமே உம் கேள்விக்கான விடை.
நீக்குவாழ்த்துகள்.
பத்து மாற்று தங்கம் என்பது செம்பு கலக்காத தூய தங்கத்தை குறிக்கும்
பதிலளிநீக்குஅறிந்து கொண்டேன், நன்றி
நீக்குபத்தரை மாற்று தங்கம் என்று பேச்சு வழக்கில் கேள்விப்பட்டிருப்பீர்கள்.பத்து பங்கு தங்கத்துடன் அரை பங்கு செம்பு சேர்த்துக் கிடைப்பதே பத்தரை மாற்று தங்கம்.
பதிலளிநீக்குவிளக்கத்திற்கு நன்றி
நீக்கு